Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு! டெஸ்ட் கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்கா இருந்து ஓய்வு

19 பங்குனி 2024 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 1680


டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஓயவை அறிவித்துள்ளார்.

26 வயதான இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா(Vanindu Hasaranga), டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இலங்கை அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

அதே நேரத்தில், 48 ஒருநாள் போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

வரும் 22ம் திகதி வங்கதேச அணிக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் தொடருடன் வனிந்து ஹசரங்கா ஓய்வு பெற உள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். 

எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இலங்கை அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்."

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஹசரங்காவின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது. 

வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்லி டி சில்வா, "ஹசரங்கா ஒரு திறமையான வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது வருத்தமளிக்கிறது. 

ஆனால், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்