Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர் பலி....!

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர் பலி....!

19 பங்குனி 2024 செவ்வாய் 11:43 | பார்வைகள் : 7623


ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது.

ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் பிரதித் தலைவராக விளங்கியவர் மர்வான் இஸா. 

மார்ச் 9, 10 ஆம் திகதிகளில் இஸாவை இலக்குவைத்து காஸாவில் தாக்குதல் நட்ததப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியர் ஹகாரி கடந்த 11 ஆம் திகதி கூறினார். 

எனினும், அந்நடவடிக்கையில் இஸா கொல்லப்பட்டாரா என்பது தெளிவில்லை என ஹகாரி கூறியிருந்தார். 

இந்நிலையில், கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலில் இஸா கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் நேற்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்