Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

19 பங்குனி 2024 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 3607


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பன்னிரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு விமானம் மூலம் அடிக்கடி பொருட்களை கொண்டு வரும் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை சுங்கத்தின் நடமாடும் பிரிவு அதிகாரிகள் குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் அம்பலாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட 60 வயதுடையவர் எனவும் மற்றைய வர்த்தகர் கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 65 வயதானவர் எனவும் தெரியவ்நதுள்ளத.

இன்று  காலை 08.30 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும், அதிகாரிகளின் நடமாட்டம் இல்லாத பகுதிகள் ஊடாக விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது பயணப் பைகளில் இருந்த பெட்டிகளில் இருந்து மதுபோத்தல்கள் போத்தல்கள் அகற்றப்பட்டு, இந்த நகைகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளது.

500 கிராம் மற்றும் 05 கிலோகிராம் எடையுள்ள நகைகளில் நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், வளையல்கள் போன்றவை இருந்தன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்