Paristamil Navigation Paristamil advert login

'மஞ்சும்மெல் பாய்ஸ்' செய்த சாதனை....

'மஞ்சும்மெல் பாய்ஸ்' செய்த  சாதனை....

20 பங்குனி 2024 புதன் 05:30 | பார்வைகள் : 6753


மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கமல்ஹாசனின் ’குணா’ படத்தின் ரெஃபரன்ஸ் கொண்டது என்பதும் இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது மட்டுமின்றி இந்த படம் தமிழகத்திலும் மலையாளத்தில் ரிலீஸானது என்பது தெரிந்ததே. மேலும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள் என்பதும் மலையாளத்தை விட இந்த படம் அதிகமாக தமிழில் தான் வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் 100 கோடி, 150 கோடி மற்றும் சில நாட்களுக்கு முன் 175 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 கோடி என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட செய்யாத வசூல் சாதனையை வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அறிமுக நடிகர்கள் நடித்த படம் வசூல் செய்திருப்பது தான் உண்மையான வெற்றி என்று கூறப்படுகிறது.

இதில் இருந்து ஒரு படத்தின் வெற்றிக்கு பிரபல ஸ்டார்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பிரபல இயக்குனர்கள் தேவையில்லை நல்ல கதை இருந்தால் போதும் என்பது 100% நிரூபித்த படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர். இதனை அடுத்து ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்