முட்டை 65
20 பங்குனி 2024 புதன் 05:36 | பார்வைகள் : 1840
பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டையை வைத்து எவ்வாறு சுவையான மொறு மொறு முட்டை 65 செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 6
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் முட்டைகளை வேகவைத்து ஓடுகளை நீக்கி அதன் வெள்ளை கருவை மட்டும் எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், சீரகப் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள்.
அடுத்து நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வேகவைத்த முட்டையின் வெள்ளை கருவை சின்ன சின்னதாக நறுக்கிகொள்ளுங்கள்.
பிறகு அதை கலந்து வைத்துள்ள மாவில் போட்டு முட்டையில் மசாலாக்கள் சேரும்படி நன்றாக கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சிறிதாக முட்டையை சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்களுக்கு ஃப்ரை செய்யுங்கள்.
முட்டை 65 நன்றாக பொன்னிறமாக பொரிந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி அனைவருக்கும் சூடாக பரிமாறவும்.