Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

20 பங்குனி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 2317


லோக்சபா தேர்தலில்  21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பட்டியலை  அக்கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.

லோக்சபா தேர்தலின் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்கும் நிலையில், திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுக தரப்பில் ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு, அவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையையும் இன்று (மார்ச் 20) திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்

இதன்படி,

வட சென்னை- கலாநிதி வீராசாமி
தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன்
மத்திய சென்னை- தயாநிதி 
ஸ்ரீபெரும்புதுார் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) - க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலுார்- கதிர்ஆனந்த்
தர்மபுரி - ஆ.மணி
திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
ஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - கே.மலையரசன்
சேலம் - செல்வகணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
கோவை - கணபதி ப. ராஜ்குமார்
பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
பெரம்பலுார் - அருண் நேரு
தஞ்சாவூர் - ச.முரசொலி
தேனி - தங்க தமிழ்செல்வன்
துாத்துக்குடி - கனிமொழி
தென்காசி - ராணி ஸ்ரீகுமார்

இப்பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர்.

ஸ்டாலின் எச்சரிக்கை


வேட்பாளர்கள் அறிவித்த பிறகு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பேசுகையில்,

ஒன்றியம், நகர அளவில் பட்டியல் எடுக்கப் போகிறேன். லோக்சபா தேர்தலில் எந்த இடத்தில் ஓட்டு குறைந்தாலும் அந்த இடத்து பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும். கூடுதல் ஓட்டுகள் பெற்றுத் தருவது அமைச்சர்கள் பொறுப்பு. திமுக கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்ட காலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டி கட்சியின் நலன் முக்கியம். தமிழகத்தின் நலன் முக்கியம் என்று வெற்றியை நோக்கி வேலை செய்ய வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் அனைவரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்