Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு 

கனடாவில்  விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு 

20 பங்குனி 2024 புதன் 10:10 | பார்வைகள் : 6934


கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையானது விமானக் கட்டணங்களை அதிகரிக்க காரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

லினெக்ஸ் எயார் விமான சேவை நிறுவனமானது விமானப் பயணங்களை நிறுத்திக் கொண்டுள்ளதோடு, வெஸ்ட் ஜெட் மற்றும் சன் விங் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விமானப் பயணச் சேவையை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் சந்தையில் போட்டித் தன்மை குறைவடையும் போது கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாது என துறைசார் வல்லுனர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான பயணச் சேவைகளை வழங்கி வரும் 40 வீதமான நிறுவனங்களின் சேவைகள் குறைவடைந்துள்ளதோடு, வரையறுக்கப்பட்ட சேவை வழங்கப்பட்டால் தானாகவே கட்டண அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்