Paristamil Navigation Paristamil advert login

யாழ். மீனவர்கள் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக போராட்டம்!

யாழ். மீனவர்கள் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக போராட்டம்!

20 பங்குனி 2024 புதன் 11:09 | பார்வைகள் : 6953


இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து, யாழ். மீனவர்கள், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக இன்று(20) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, யாழ். மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில், உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,  மாதகல் மீனவர்களும் இணைந்துக்கொண்டு போராட்டத்தில் இணைந்துக்கொண்டனர்.

இதனையத்து, பேரணியாக சென்ற மீனவர்கள், யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்