Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்..!

10 ஆவணி 2023 வியாழன் 06:29 | பார்வைகள் : 9560


இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் வரவேற்பை பெற்ற பிக்போஸ் சீசன் 7 நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஆறு வருடங்களாக மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார்.நிகழ்ச்சியின் பொருட்டு அவர் நடித்துள்ள முன்னோட்ட காணொளியின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் வைரலான பிரபலங்கள், பரபரப்பாக இருந்து இன்று வாய்ப்பில்லாமல் உள்ளவர்கள், சின்னத்திரையில் தற்போது நடித்து வருபவர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், நகைக்சுவை நடிகர்கள் இவ்வாறு பலரின் கலவையாகவே போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பிக்போஸ் 7வது சீசனில் பங்கேற்கப் போகிறவர்கள் என சில போட்டியாளர்களின் விவரங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.

அந்த பட்டியலில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பப்லு எனப்படும் பிருத்திவிராஜ், சின்னத்திரை தொகுப்பாளினியான ஜேக்லின், சர்ச்சை கருத்துகளால் பிரபலமடைந்த ரேகா நாயர், நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ், தனியார் பேருந்து பெண் ஓட்டுநராக பிரபலமான ஷர்மிளா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த தகவல்களைத் தொடர்ந்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் இரண்டு பிக்போஸ் வீடுகள் அமைக்கப்படும் என்றும் அதில் ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும் இரண்டாவது வீட்டில் பழைய போட்டியாளர்களும் தங்க வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மற்றும் பழைய போட்டியாளர்கள் தனித்தனியே இரண்டு வீடுகளில் இருக்கப்போவதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வழக்கமான எண்ணிக்கையிலேயெ இரண்டு வீட்டிலும் போட்டியாளர்கள் பிரித்து தங்க வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை.பிக்போஸ் சீசன் 7 முன்னோட்டம் இந்த மாத இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் இப்போதிருந்தே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்