Val-de-Marne : சிறுமியை மோதித்தள்ளிய மகிழுந்து!!
20 பங்குனி 2024 புதன் 17:51 | பார்வைகள் : 13455
இரண்டு வயது சிறுமி ஒருவர் காவல்துறையினர் மகிழுந்துடன் மோண்டுள்ளார்.
இச்சம்பவம் மார்ச் 20, இன்று புதன்கிழமை காலை Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் இடம்பெற்றது. பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட இரண்டு வயது சிறுமி ஒருவரை காவல்துறையினரின் மகிழுந்து ஒன்று மோதியுள்ளது. மிதமான வேகத்தில் பயணித்த மகிழுந்து, சிறுமியை மோதியதில், அவருக்கு முகத்திலும் கையிலும் காயம் ஏற்பட்டது.
எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், சிறுமி மிக விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது மகிழுந்தின் இரு எச்சரிக்கை விளக்குகளும் ஒளிர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan