தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் கைது!!

21 பங்குனி 2024 வியாழன் 08:37 | பார்வைகள் : 10746
கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஒருவரை உள்நாட்டு பாதுகாப்பு படையினர் (direction générale de la sécurité intérieure) கைது செய்துள்ளனர்.
இம்மாதத்தின் ஆரம்பத்தில் - மார்ச் 8 ஆம் திகதி அவர் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. அவர் 62 வயதுடையவர் எனவும், தீவிர அடிப்படைவாத சிந்தனைகள் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு (IS) ஆதரவு மனநிலையுடன் இருப்பதாகவும், அவர் பரிசில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025