Paristamil Navigation Paristamil advert login

பிரேஸில் நாட்டில் போலி கொவிட் தடுப்பூசி சான்றிதழால் பரபரப்பு

பிரேஸில் நாட்டில் போலி கொவிட் தடுப்பூசி சான்றிதழால் பரபரப்பு

21 பங்குனி 2024 வியாழன் 09:29 | பார்வைகள் : 3842


போலியான கொவிட் தடுப்பூசி சான்றிதழ் தயாரிப்பு தொடர்பான வழக்கில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயற்பட்டவராக விமர்சிக்கப்படுவர் போல்சனரோ.

கொவிட் தடுப்பூசி ஏற்றுவதையும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில்,  தனக்கும் தனது மகளுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக போலியான சான்றிதழ் தயாரிப்பதற்கு போல்சனரோ உத்தரவிட்டார் என ஜெய்ர் போல்சனரோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெய்ர் போல்சனரோ மற்றும் 16 பேருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போல்சனரோ தோல்வியுற்றார். 

அதன்பின் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சதிப்புரட்சி நடத்த முயன்றார் எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்