21 பங்குனி 2024 வியாழன் 09:41 | பார்வைகள் : 4027
ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த பின்னர், 69 பேரை இந்தோனேஷிய அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்துக்கு அருகில், நேற்று புதன்கிழமை இப்படகு கவிழ்ந்ததையடுத்து, மீட்புக்குழுக்கள் விரைந்தன.
இந்நிலையில், 69 ரோஹிங்யா அகதிகள் மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில், அண்கள், பெண்கள், சிறார்கள் அடங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மத்தியிலிருந்து இவ்வருடம் ஜனவரி இறுதிவரை 1752 ரோஹிங்யா அகதிகள் இந்தோனேஷியாவின் ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ரா பிராந்தியங்களில் தரையிறங்கியிருந்தனர் என அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.