பரிஸ் : சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் வெளியேற்றம்!!

21 பங்குனி 2024 வியாழன் 11:40 | பார்வைகள் : 10680
பரிசில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள சுரங்கம் ஒன்றின் அருகே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே நேற்று மார்ச் 20, புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். அகதிகளில் 14, 15 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 120 அகதிகள் இருந்ததாகவும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பரிசில் வசிக்கும் அகதிகள், வீடற்றவர்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது. பல தடவைகள் பரிசில் இருந்து அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் வெளியேற்றம் இடம்பெற்றது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025