இலங்கை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
21 பங்குனி 2024 வியாழன் 12:21 | பார்வைகள் : 2970
இலங்கையில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம், பெப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.