காசாவில் மருத்துவ வசதிகளை முற்றாக அழிக்கும் இஸ்ரேல்
21 பங்குனி 2024 வியாழன் 12:48 | பார்வைகள் : 3904
பாலஸ்தீனியர்களை அவர்களின் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதற்காக இஸ்ரேலிய படையினர் திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை அழித்துவருகின்றனர.
அமெரிக்க பிரிட்டனை சேர்ந்த மருத்துவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு இந்த தகவலை தெரிவிக்கவுள்ளனர்.
காசாவின் மருத்துவமனைகளில் தாமாக முன்வந்து பணியாற்றிய பின்னர்நாடு திரும்பியுள்ள மருத்துவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை இந்த வாரம் சந்திக்கவுள்ளனர்.
பைடன்நிர்வாகத்துடனான இந்த சந்திப்பின்போது பாதுகாப்பான உணவு விநியோகம் சுகாதார சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புதலிற்கு அவசியமான யுத்தநிறுத்த உடன்படிக்கை இன்றி குண்டு வீச்சில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களிற்கான நிதி உதவியை அதிகரிப்பது அர்த்தமற்ற விடயம் என மருத்துவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் அதிர்ச்சி தரும் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளனர் என காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் பணியாற்றிய பேராசிரியர் நிக்மேய்னார்ட் தெரிவித்துள்ளார்.
சுகாதார கட்டமைப்புகளை இஸ்ரேலிய படையினர் திட்டமிட்ட முறையில் அழிக்கின்றனர் சுகாhதார பணியாளர்களை அழிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இது வெறுமனே கட்டிடங்களை இலக்குவைப்பது தொடர்பானது மாத்திரமில்லை இது மருத்துவமனையின் உட்கட்டமைப்பை அழிப்பது தொடர்பானது அல்ஸிபா மருத்துவமனையின் ஒக்சிசன் டாங்கியை அழிப்பது தொடர்பானது சிடி ஸ்கானர்களை அழிப்பது மீண்டும் சுகாதார கட்டமைப்பைகட்டியெழுப்புவதை கடினமாக்குவது தொடர்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஹமாஸ்தீவிரவாதிகளை மாத்திரம் இலக்குவைக்கின்றார்கள் என்றால் ஏன் மருத்துவ கட்டமைப்பை அழிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காசாவின் 36 மருத்துவமனைகளில் எதுவும் முழுமையாக இயங்கவில்லை என ஐநா தெரிவிக்கின்றது.
பல மருத்துவமனைகள் முற்றாக அழிந்துவிட்டன சில ஒரளவு இயங்குகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீண்டும் அல்சிபா மருத்துவமனையின் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இஸ்ரேல் நூற்றுக்கணக்கான மருத்துவபணியாளர்களை கைதுசெய்து கொலை செய்ததும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனியர்களை அவர்கள் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் மருத்துவமனைகளை இலக்குவைக்குகின்றது என மருத்துவர் மேய்னார்ட் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் செயல் இழந்தால் பொதுமக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்துகின்றது மருத்துவவசதிகள் குழம்பினால் பாதிக்கப்பட்டால் காசாநகர மக்கள் தென்பகுதியை நோக்கி நகரத்தொடங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.