Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்ஸ் : 30 பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

இல் து பிரான்ஸ் : 30 பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

21 பங்குனி 2024 வியாழன் 16:44 | பார்வைகள் : 16624


இல் து பிரான்சுக்குள் உள்ள 30 பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் உட்பட்ட இரவில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது ஒரு புரளி மட்டுமே என இன்று வியாழக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. அனைத்து பாடசாலைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் கேப்ரியல் அத்தால், கல்வி அமைச்சர் Nicole Belloubet ஆகிய இருவரும் தொலைபேசியூடாக இது தொடர்பாக உரையாடியதாக அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்