Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளுக்காக ‘அப்பிள்’ நிறுவனம் கொண்டுவர உள்ள புதிய வசதி!

ஒலிம்பிக் போட்டிகளுக்காக ‘அப்பிள்’ நிறுவனம் கொண்டுவர உள்ள புதிய வசதி!

21 பங்குனி 2024 வியாழன் 17:13 | பார்வைகள் : 4547


பரிசில் இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளதை அடுத்து, அதற்குரிய வசதிகள் பெருமளவில் ஏற்பத்தி தரப்பட உள்ளன. குறிப்பாக தொடருந்து நிலையங்களில் 17 மொழிகளில் உரையாடி தகவல்களை பறிமாறக்கூடிய கருவிகளுடன் தொடருந்து ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள். உதாரணமாக சீன மொழி பேசும் ஒருவர் தன்னுடைய மொழியிலேயே கேள்விகளை கேட்டு, அவருடைய மொழியிலேயே பதிலையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில், மற்றுமொரு வசதியாக ‘அப்பிள்’ நிறுவனம் தன்னுடைய பயனாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி, தன்னுடைய Map செயலியில் ( application de cartographie.) ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் இடங்களை சிறப்பு சமிக்ஞையுடன் புள்ளடியிட்டு காண்பிக்க உள்ளது. அத்தோடு குறித்த அரங்கிற்கு செல்லும் தொடருந்து சேவைகள், நடந்து செல்லக்கூடிய பாதைகள், அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போட்டிகள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை பயனாளர்களுக்கு தர உள்ளது.

அது தொடர்பான வேலைகளை விரைவில் அப்பிள் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. 360 பாகை கண்காணிக்க கூடிய கமராவுடன் வீதிகளை பதிவு செய்ய உள்ளது.

தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் ஆறு மாவட்டங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் இந்த தகவல்கள் சேகரிப்பு பணி ஆரம்பமாக உள்ளது எனவும், வரும் மார்ச் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை இந்த பணிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகள் சேகரிக்கப்பட்டவுடன், அப்பிள் நிறுவனத்தின் Map செயலி மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்