Paristamil Navigation Paristamil advert login

€12.6 பில்லியன் யூரோக்கள் செலவில் A350 விமானங்களை வாங்கும் கொரிய நிறுவனம்!

€12.6 பில்லியன் யூரோக்கள் செலவில் A350 விமானங்களை வாங்கும் கொரிய நிறுவனம்!

21 பங்குனி 2024 வியாழன் 17:59 | பார்வைகள் : 4152


தென் கொரியாவைச் சேர்ந்த Korean Air விமான நிறுவனம் €12.6 பில்லியன் யூரோக்கள் செலவில் பிரான்சிடம் இருந்து புதிய விமானங்களை வாங்க உள்ளது. 

உலகப்புகழ்பெற்ற A350 ரக விமானங்களையே குறித்த நிறுவனம் வாங்க உள்ளது. இதற்காக பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான Airbus நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மொத்தமாக 33 விமானங்களை அந்நிறுவனம் வாங்க உள்ளது. இவற்றில் இருபத்தி ஏழு -  A350-1000s ரக விமானங்களும், ஆறு A350-900s ரக விமானங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

A350 குடும்பத்தில் A350-1000s விமானமானது, அளவில் பெரியதும் அதிக திறன் கொண்டதுமாகும். 410 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரே தடவையில் 16,000 கிலோ மீற்றர் தூரம் பறக்கக்கூடியதாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்