தைவானைச் சுற்றி 32 போர் விமானங்கள்! சீனா மீது குற்றச்சாட்டு
22 பங்குனி 2024 வெள்ளி 02:46 | பார்வைகள் : 4043
சீனா தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோருவதால், தைவானுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் தைவானைச் சுற்றி சீனாவின் 11 கடற்படைக் கப்பல்கள் கண்டறியப்பட்டதாக தைவான் கூறியது.
அதேபோல் சந்திர புத்தாண்டு விடுமுறையின்போது தொடர்ச்சியாக 2 நாட்களில் 8 சீன பலூன்களை தைவான் கண்டறிந்தது.
இந்நிலையில் தைவானைச் சுற்றி 5 கடற்படைக் கப்பல்கள் இயங்குவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
அத்துடன் 24 மணிநேரத்தில் 32 சீன இராணுவ விமானங்கள் தீவைச் சுற்றி கண்டறியப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி பிற்பகுதியிலும், பெப்ரவரி தொடக்கத்திலும் இரண்டு 24 மணி நேர காலப்பகுதிகளில் தீவைச் சுற்றி 33 சீனப் போர் விமானங்களைக் கண்டறிந்தது, இந்த ஆண்டின் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
மேலும், தீவைச் சுற்றி போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.