CSK அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய MS தோனி...

22 பங்குனி 2024 வெள்ளி 02:57 | பார்வைகள் : 8190
2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இன்று 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை அணி தலைவர் தோனி ரசிகர்களுக்கு சோகமான தகவலை வழங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இனி ருதுராஜ் கெய்க்வாடிடம் இருப்பார் என அணி தனது உத்தியோகபூர்வ தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் இருந்து ருதுராஜ் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025