Paristamil Navigation Paristamil advert login

La Courneuve இல் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்!!

La Courneuve இல் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்!!

22 பங்குனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6406


நேற்று மார்ச் 21 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை La Courneuve (Seine-Saint-Denis) இல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி கொல்லப்பட்ட Wanys எனும் இளைஞனின் சாவுக்கு நீதிகேட்டு மக்கள் எழுச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

La Courneuve நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக குவிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கைகளில் பல பதாகைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி கொல்லப்பட்ட Wanys எனும் இளைஞன் நேற்றைய தினம் அவருக்கு 19 ஆவது வயது பூர்த்தியாவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

”நான் என் வாழ்நாளில் ஒருதடவையேனும் பொதுமக்கள் மத்தியில் கதைக்கமுடியும் என எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஆனால் இன்று எனது சகோதரன் கொல்லப்பட்டுள்ளார். எனது சகோதரனின் ஆதரவே எனது குடும்பம் நிலைத்து நிற்பதற்கு காரணமாக அமைந்தது. அதனை குலைத்துவிட்டார்கள்!” என கொல்லப்பட்ட Wanys இன் சகோதரன் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை மார்ச் 20 ஆம் திகதி Aubervilliers நகரில் குறித்த இளைஞன் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதுண்டு பலியாகியுள்ளார். காவல்துறையினர் வேண்டுமென்றே மகிழுந்துடன் மோதியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் குற்றம் சாட்டினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்