அசுர வளர்ச்சியில் சுற்றுலாத்துறை! - கொவிட் 19 கால வீழ்ச்சியில் இருந்து மீண்டது!!
22 பங்குனி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 4838
கொவிட் 19 காலத்தோடு வீழ்ச்சியடைந்திருந்த பிரெஞ்சு சுற்றுலாத்துறை தற்போது அசுர வளர்ச்சியுடன் அதில் இருந்து மீண்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டும் €63.5 பில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளனர். போக்குவரத்து, தங்குமிடம், சுற்றுலாத்தலங்கள், கேளிக்கை விளையாட்டுத் தலங்கள், உணவு போன்ற அனைத்து துறையும் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டில் பிரான்ஸ் ரக்பி உலகக்கிண்ண போட்டிகளை நடாத்தியிருந்தமையும் சுற்றுலாப்பயணிகள் வரத்துக்கு ஒரு முக்கியகாரணமாக அமைந்திருந்தது.
முன்னதாக, அதிகபட்ச சாதனையாக 2019 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. அந்த ஆண்டில் €56.7 பில்லியன் யூரோக்களை வெளிநாட்டவர்கள் செலவு செய்திருந்தனர்.
பின்னர் கொவிட் 19 காரணமாக 2020 ஆம் ஆண்டில் €28.5 பில்லியன் யூரோக்களையும், 2021 ஆம் ஆண்டில் €34.5 பில்லியன் யூரோக்களையும் செலவிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவில் சென்ற ஆண்டு சுற்றுலாத்துறை அதிக வருவாய் ஈட்டியிருந்தது.