Paristamil Navigation Paristamil advert login

யாழில் அதிகாலை பாரிய விபத்து

யாழில் அதிகாலை பாரிய விபத்து

22 பங்குனி 2024 வெள்ளி 05:47 | பார்வைகள் : 7187


யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை எரிபொருள் தாங்கி முந்தி செல்ல முற்பட்ட பேதே எதிரில் வந்த டிப்பருடன் மோதியது.

அதனையடுத்து, சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்தியதால் எவ்விதமான உயிரிழப்புகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்து காரணமாக போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்