Paristamil Navigation Paristamil advert login

ஒரே படத்தில் கமல்-ரஜினி இணைவார்களா?

ஒரே படத்தில் கமல்-ரஜினி  இணைவார்களா?

22 பங்குனி 2024 வெள்ளி 08:44 | பார்வைகள் : 3365


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ’தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த நிலையில் அதன் பிறகு ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர்.

இந்த நிலையில் தமிழில் இருவரும் இணைந்து நடித்து 42 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் தான் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’இளையராஜா’ என்று கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் ’கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கு உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் ’இளையராஜா’ படத்திற்கு திரைக்கதை தான் எழுதுவதாக கமல்ஹாசன் அறிவித்த நிலையில் இந்த படத்தில் அவர் இணைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட ஒரு சில கேரக்டர் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும் அதில் கமல், ரஜினி கேரக்டரில் அவர்கள் இருவருமே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல், ரஜினி ஒரே படத்தில் நடிக்கும் மேஜிக் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கமல், ரஜினி மட்டும் இன்றி ஏஆர் ரகுமான், கங்கை அமரன் உள்ளிட்ட பிரபலங்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.--

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்