இலங்கையில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி

22 பங்குனி 2024 வெள்ளி 09:06 | பார்வைகள் : 6951
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ரி56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கும் எவருக்கும், 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசாக வழங்குவதுடன் மேலும் பல பரிசுகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025