கனடாவில் கோர விபத்து - 5 பேர் பலி
22 பங்குனி 2024 வெள்ளி 10:03 | பார்வைகள் : 12857
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan