உலகிலேயே முதல்முறை., நோயாளி ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் மாற்றம்

22 பங்குனி 2024 வெள்ளி 12:17 | பார்வைகள் : 5368
உலகில் முதன்முறையாக நோயாளி ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மனிதர்களுக்கு விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான தேடலில் சமீபத்திய பரிசோதனையாக, பாஸ்டனில் உள்ள மருத்துவர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 62 வயதான நோயாளி ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை மாற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததையடுத்து, சனிக்கிழமை பன்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் உயிருடன் உள்ள ஒருவருக்கு இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னதாக, பன்றி சிறுநீரகங்கள் தற்காலிகமாக மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர்களுக்கு (brain-dead donors) இடமாற்றம் செய்யப்பட்டன.
மேலும், இரண்டு ஆண்களுக்கு பன்றிகளிடமிருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இருப்பினும் இருவரும் சில மாதங்களில் இறந்தனர்.