கெஜ்ரிவாலுடன் போராடியதற்காக வருந்துகிறேன்! அன்னா ஹசாரே
22 பங்குனி 2024 வெள்ளி 14:54 | பார்வைகள் : 7948
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இணைந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக ஹசாரே டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
இதன்மூலம் கவனம் ஈர்த்த கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்து, பின்னர் 2012ல் ஆம்ஆத்மி கட்சியை உருவாக்கினார். டில்லியில் ஆட்சியை பிடித்து முதல்வராகவும் பொறுப்பேற்றார் கெஜ்ரிவால். தற்போது புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று (மார்ச் 21) அமலாக்கத்துறை கைது செய்தது.
கெஜ்ரிவால் கைது பற்றி அன்னா ஹசாரே வெளியிட்ட வீடியோவில், மதுபான கொள்கைகளை வகுத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுவுக்கு எதிராக போராடியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
அவரின் கைதுக்கு அவரே தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். ஊழல், மதுவுக்கு எதிராக அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் இருவரும் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், ஹசாரேவின் இந்த கருத்தால், ஆம்ஆத்மி தரப்பினர் கலக்கமடைந்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan