துருக்கியில் பேருந்து விபத்து - இலங்கையர்கள் பலர் படுகாயம்
11 ஆவணி 2023 வெள்ளி 03:56 | பார்வைகள் : 14924
துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி - இஸ்தான்புல் நகரில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்தின் போது இலங்கையர் ஒருவரின் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 50 அடி பள்ளத்தினுள் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த விபத்தின் பொது பேருந்துக்குள் 35 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் துருக்கி நேரப்படி நேற்று மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan