இருளில் மூழ்கும் பரிஸ்!!

22 பங்குனி 2024 வெள்ளி 18:45 | பார்வைகள் : 11717
நாளை மார்ச் 23, சனிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரம் உள்ளிட்ட பரிசின் பல பொது இடங்கள் தனது மின் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்க உள்ளது.
சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் 'காலநிலை அவசரநிலை' (l’urgence climatique) காரணமாக இந்த விளக்குகள் அணைக்கப்படு இருளில் மூழக உள்ளது. இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட உள்ளன. ஈஃபிள் கோபுரம் தவிர, பல நகரசபைக் கட்டிடங்கள், லூவர் அருங்காட்சியகம், நோர்து-டேம் தேவாலயம், Hôtel des Invalides உள்ளிட்ட பல இடங்களிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
புவி வெப்பமடைதலுக்கு மின் விளக்குகள் ஏற்படுத்தும் ஒளியும் ஒரு காரணம் என்பதால் இந்த சர்வதேச நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு 185 நாடுகள் இதில் பங்கெடுத்திருந்தன. உலகம் முழுவதும் 3,000 பொது இடங்களில் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025