மொஸ்கோவில் பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் பலி! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!!

23 பங்குனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 7828
இரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
"மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மிக கடுமையான கண்டனங்கள்" என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எலிசே மிக நெருக்கமாக சூழ்நிலைகளை கவனித்து வருகிறது எனவும், "பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அனைத்து ரஷ்ய மக்களுக்கும் பிரான்ஸ் தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது!" எனவும் அவர் தெரிவித்தார்.
மொஸ்கோவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இடம்பெற்ற தாக்குதலில் *60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் வரை காயமடைந்துள்ளனர். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.