Neuilly-sur-Marne : பாரிய ஆயுதங்கள் மீட்பு!

23 பங்குனி 2024 சனி 07:37 | பார்வைகள் : 9610
Neuilly-sur-Marne (Seine-Saint-Denis) நகரில் இருந்து 'ரொக்கட் லோஞ்சர்' உள்ளிட்ட பாரிய ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று மார்ச் 22, வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Marceline-Desbordes-Valmore வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்தில் இருந்து ரொக்கட் லோஞ்சர், இரண்டு கைத்துப்பாக்கிகள், வெண்டுகுண்டுகள், கலாஷ்னிகவ் துப்பாக்கி (ரைஃபிள் வகை துப்பாக்கி) போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆயுதங்கள் தொடர்பில் காவல்துறையினரின் ஆய்வுகூடம் தகவல்களை திரட்டி வருகிறது. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3