ரஷ்யா விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

23 பங்குனி 2024 சனி 08:23 | பார்வைகள் : 10461
மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன் பின்னணியில் உக்ரைன் இருந்தால் அதற்கு காரணமானவர்களை கருணையற்ற முறையில் அழிக்க வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெதுடேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் இசை அரங்கில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் மாஸ்கோ கலை அரங்கில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெதுடேவ்(Dmitry Medvedev) இரங்கல் தெரிவித்தார்.
அதே நேரத்தில் இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றும் பலத்த பதிலடி தேவை என்றும் பரிந்துரைத்தார். இருப்பினும், தாக்குதலின் தன்மை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
"தீவிரவாதிகளைப் புரிந்து கொள்ள ஒரே வழி பழிக்கு பழி தீவிரவாதம் மட்டுமே" என்று கூறினார், தீவிரவாதத்தை படைகளால் எதிர்க்காவிட்டால், இதற்கு எந்த விசாரணைகளும் உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உக்ரைன் உடைந்தையாக இருப்பதாக கூறி உக்ரைனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
துப்பாக்கி சூடுக்கு உக்ரைன் பொறுப்பு என்று நிரூபணம் செய்யப்பட்டால், அவர்களை "கருணையற்ற முறையில் அழிக்க வேண்டும்" என்று மெதுடேவ் மிரட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் கீவ் ஆட்சியின் தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டால், அவர்களையும், அவர்களின் சித்தாந்தங்களையும் வேறு விதமாக கையாளுவோம் என தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1