Paristamil Navigation Paristamil advert login

மனித மூளையில் Neuralink சிப்! செஸ் விளையாடி அசத்திய முதல் நோயாளி: எலான் மஸ்க் சாதனை

மனித மூளையில் Neuralink சிப்! செஸ் விளையாடி அசத்திய முதல் நோயாளி: எலான் மஸ்க் சாதனை

23 பங்குனி 2024 சனி 08:44 | பார்வைகள் : 5714


எலான் மஸ்க் நிறுவனமான நியூரோலிங், மூளை-கணினி இடைமுக தொழில்நுட்பத்தில் (BCI) முன்னேற்றம் கண்டுள்ளது.

எலோன் மஸ்கின் நரம்பு-கணினி இடைமுக தொழில்நுட்ப(BCI) நிறுவனமான நியூரோலிங் குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை எட்டியுள்ளது.

நியூரோலிங் நிறுவனம்(Neuralink) சமீபத்திய நேரலை ஒளிப்பரப்பில், தங்களது முதல் மனித நோயாளி நோலன் அர்பாக், அவரது மூளையில் பொருத்தப்பட்ட கருவியைப் பயன்படுத்தி கணினி கர்சரை(cursor) கட்டுப்படுத்தி ஆன்லைன் செஸ் விளையாடுவதை அவர்கள் காட்சிப்படுத்தினர்.

நீச்சல் விபத்தில் தோள்பட்டையில் இருந்து கீழ் பகுதி முடங்கிய 29 வயதான நோலன் அர்பாக்(Noland Arbaugh), இந்த தொழில்நுட்பத்தின் திறனை உதாரணப்படுத்துகிறார்.

இந்த மூளை இணைப்பு, அவரது சிந்தனை சமிக்ஞைகளைத் திரையில் செயல்களாக மாற்றி, உடல் அசைவுகள் இல்லாமல் கர்சரை நகர்த்தவும் செஸ் நகர்த்தல்களை செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த சாதனை ஜனவரியில் அர்பாக் மீது நியூரோலிங் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்ததைத் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக அறிக்கைகள் அவர் தனது மூளையை கொண்டு கணினி சுட்டியை கட்டுப்படுத்தும் திறனை வெளிப்படுத்தி இருந்தன. இந்த புதிய செயல்விளக்காட்டுதல், மூளை-கணினி இடைமுகங்களைப் பயன்படுத்தி சிக்கலான தொடர்புகளுக்கான திறனையும் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

"டெலிபதி”(Telepathy) என்று அழைக்கப்படும் நியூராலிங்கின் தொழில்நுட்பம், பயனர்கள் தொலைபேசிகள் மற்றும் கணினிகள் போன்ற கருவிகளை தங்கள் சிந்தனைகளால் மட்டுமே கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

இந்த இடைமுகத்தைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட எந்தக் கருவியையும் இயக்க முடியும் என்ற எதிர்காலத்தை நிறுவனம் கற்பனை செய்கிறது, இது முடக்குவாதம் அல்லது பிற நரம்பியல் நிலைகளைக் கொண்டவர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தும் எனவும் நம்புகின்றனர்.

இது ஒரு சிறந்த முன்னேற்றமாக இருந்தாலும், நியூரோலிங் இன்னும் மனித சோதனைகளின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

பெரிய அளவில் இம்மூளை இணைப்பின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதிப்படுத்த மேலும் ஆராய்ச்சி தேவை. கூடுதலாக, மூளை-கணினி இடைமுகங்களின் நெறிமுறை தாக்கங்களை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்