பரிசில் 137 வகுப்பறைகள் மூடப்படுகின்றன!!
23 பங்குனி 2024 சனி 10:05 | பார்வைகள் : 4319
2024/2025 புதிய கல்வி ஆண்டின் பொது தலைநகர் பரிசில் 137 வகுப்பறைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் தனது மக்கள் தொகையை தொடர்ச்சியாக இழந்து வருவதை அடுத்து, மாணவர்கள் பற்றாக்குறையினால் இந்த வகுப்பறைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 174 வகுப்பறைகள் மூடப்பட உள்ள நிலையில், அவற்றில் பயிலும் மாணவர்களை புதிய வகுப்பறைகளில் இணைக்க உள்ளதால், அதற்கென புதியாக 37 புதிய வகுப்பறைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எவ்வாறாயினும், இந்த செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகும் போது 137 வகுப்பறைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
125 ஆசிரியர்களின் பணிகளும் நீக்கப்பட உள்ளன.