வர்தக மையத்தின் மீது தாக்குதல் திட்டம் - 14 வயதுச் சிறுவன் கைது!!
23 பங்குனி 2024 சனி 10:31 | பார்வைகள் : 4635
லில் நகரத்தில் உள்ள வர்தக மையத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளத் திட்டமிட்ட 14 வயதுச் சிறுவன், பரிசின் பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று, மார்ச் 22 வெள்ளிக்கிழமை , 14 வயதுடைய இவர், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை நீதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளார்.
«மக்களுக்கு எதிராக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களை செய்யும் நோக்கில் பயங்கரவாதக் குற்றவியல் தொடர்பில் இருந்துள்ளமை » மற்றும் «ஒரு பயங்கரவாதத் தாக்குதலிற்கு நேரடியாகத் தூண்டியமை» ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டார்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கு விசாரணையின்படி, மேலும், இணைய மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும், பயங்கரவாதச் செயலை இவர் தூண்டியுள்ளார் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
«பிரான்சின் தேசிய உள்ளகப் புலனாய்வுத் துறையினர் தங்களது தொடர்ச்சியான சிறந்த நடவடிக்கையினால், மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளனர்» என பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.