Paristamil Navigation Paristamil advert login

56 ஆண்டுகள் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்

56 ஆண்டுகள் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்

23 பங்குனி 2024 சனி 11:15 | பார்வைகள் : 3575


பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் கருவுற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தனது வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது குறித்து அந்த பெண்ணுக்கே தகவல் தெரிந்திருக்கவில்லை.

நீண்ட காலம் வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த டேனியலா வெரா சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். 

வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற டேனியலாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் டேனியலா வயிற்றில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள், டேனியலா வயிற்றில் கருவுற்று வளராமல் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். 

அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே டேனியலா உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு டேனியலாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருவுறும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை தவிர உடலின் மற்ற இடத்தில் கரு உருவாகும் என்று மருத்துவர் பேட்ரிக் டெசிரெம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையை "எக்டோபிக் கருவுறுதல்" (ectopic pregnancy) என்று மருத்துவ துறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலை தான் டேனியலாவுக்கும் ஏற்பட்டது.

இந்த சூழலில் குழந்தை சரியாக வளர முடியாது என்பதால் அது பெண்ணின் உடலில் கால்சியமேற்றம் (கரு கால்ஷியமாக மாறிவிடுதல்) ஆகி விடும்.

 இந்த நிலையில், பெண்களின் வயிற்றில் சிசு இருப்பது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாது. மேலும் வலியும் ஏற்படாது. எக்ஸ்-ரே செய்யாமல் இந்த நிலையை கண்டறியவே முடியாது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்