Paristamil Navigation Paristamil advert login

நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம்; கண்டுபிடித்தது சந்திரயான்-2

நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம்; கண்டுபிடித்தது சந்திரயான்-2

23 பங்குனி 2024 சனி 13:05 | பார்வைகள் : 1552


நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை சந்திரயான்-2 ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதுடன், அந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதன் முறையாக நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கினார்.

இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்தார்.

அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருகிறது. 

இந்த இடத்தை தற்போது இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

நிலவில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. 

சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்