Paristamil Navigation Paristamil advert login

யாழில்  28 நாள் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழப்பு

யாழில்  28 நாள் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழப்பு

23 பங்குனி 2024 சனி 16:17 | பார்வைகள் : 2639


யாழ்ப்பாணத்தில் பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று  உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே உயிரிழந்துள்ளது. 

தயார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை படுக்க வைத்துள்ளார். 

சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து , குழந்தையை எழுப்பிய போது குழந்தை மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் ,குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்