Val-d'Oise : நீண்ட துரத்தலின் பின்னர் வாகன சாரதி கைது! - காவல்துறை வீரர் காயம்!
23 பங்குனி 2024 சனி 16:20 | பார்வைகள் : 5074
காவல்துறை வீரர் ஒருவரை காயப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Cergy (Val-d'Oise) நகரில் இடம்பெற்றது. 57 வயதுடைய ஒருவர் வாகனம் ஒன்றில் அதிவேகமாக பயணித்துள்ளார். வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு காவல்துறையினர் குறித்த வாகனத்தை அடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனம் காவல்துறையினர் அருகே வேகத்தை குறைத்து அருகே வந்தது. காவல்துறையினர் வாகனத்தின் அருகில் செல்ல, திடீரென வாகனம் வேகமெடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றது.
A15 நெடுஞ்சாலைக்குள் நுழைந்து அதிவேகமாக பயணித்தது. காவல்துறையினர் வாகனத்தை விடாது துரத்திச் சென்றனர்.
அதன்போது வாகனம் U-turn எடுத்து திரும்பு காவல்துறையினரின் மகிழுந்தை மோதி தள்ளிவிட்டு Conflans-Sainte-Honorine (Yvelines) நகர் நோக்கி N184 சாலைக்குள் நுழைந்தது. அங்கு வைத்து இரண்டாவது காவல்துறையினரின் மகிழுந்தையும் மோதியது.
ஒருவழியாக நீண்ட துரத்தலின் பின்னர் வாகனம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த சாரதி கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.