ஈஃபிள், லூவர், நோர்து-டேம் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் இருளில் மூழ்கின!!
24 பங்குனி 2024 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 4451
ஈஃபிள் கோபுரம், லூவர் அருங்காட்சியகம், நோர்து-டேம் தேவாலயம் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் நேற்று சனிக்கிழமை இருளில் மூழ்கி, தன் சுயத்தை இழந்திருந்தது.
புவி வெப்பமடைதலுக்கு எதிராக ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் “Earth Hour" எனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் உலகில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கச் செய்வதே அதன் திட்டமாகும். பிரான்சில் கடந்த ஆறு ஆண்டுகளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரான்சில் ஏழாவது ஆண்டாக நேற்றைய தினம் இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரையான ஒருமணிநேரம் இந்த Earth Hour கொண்டாடப்பட்டது. Tour Eiffel, Musée du Louvre, Sacré-Cœur, Notre-Dame de Paris, Cathédrale Saint-André de Bordeaux, l'Hôtel de Ville de Lyon, Grand Place de Lille உள்ளிட்ட பல இடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டது.
அதேவேளை, இலண்டன், டோக்யோ, நியூ டெல்லி போன்ற உலக தலைநகரங்களிலும் இந்த ”Earth Hour” கொண்டாடப்பட்டது.