Paristamil Navigation Paristamil advert login

மாஸ்கோ தாக்குதல் - கழிவறையில் கிடந்த 28 உடல்கள்

மாஸ்கோ தாக்குதல் - கழிவறையில் கிடந்த 28 உடல்கள்

24 பங்குனி 2024 ஞாயிறு 10:57 | பார்வைகள் : 6383


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோக்கஸ் சிட்டி ஹால் இசை அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 107 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முதலில் 143 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்து இருந்த நிலையில், பின்னர் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் பலர் துப்பாக்கி சூடு காயங்களால் உயிரிழந்துள்ளனர், பலர் பயங்கரவாதிகளால் கலை அரங்கில் ஏற்படுத்தப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 28 பேரின் உடல் கழிப்பறைகளில் இருந்தும், 14 உடல்கள் படிக்கட்டுகளிலும்  கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மீதான இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுவான (ISIS-K) பொறுப்பேற்றுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, அவசரகால ஊழியர்கள் இசை அரங்கின் இடிபாடுகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், தாக்குதலுடன் தொடர்புடைய பதினோரு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் நான்கு துப்பாக்கி சுடும் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தாக்குதலாளர்கள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறுகிறது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு உக்ரைனுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Russian President Vladimir Putin ) வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்