Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு!!??

பிரெஞ்சு இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு!!??

24 பங்குனி 2024 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 5577


பிரெஞ்சு இராணுவத்தில் புதிய வீரர்களை இணைத்துகொள்வதற்கு நாடு முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘கட்டாய ஆட்சேர்ப்பினை’ மீண்டும் கையில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

’பிரெஞ்சு இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு’ எனும் சட்டம் 1798 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி Jacques Chirac அந்த முறையை இரத்துச் செய்தார். கட்டாய ஆட்சேர்ப்புக்கு பதிலாக ‘விரும்பினால்’ இராணுவத்தில் இணைந்துகொள்ளலாம் எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இளைஞர்கள் பலர் இராணுவத்தில் சேருவதில் விருப்பம் காட்டவில்லை எனவும், இராணுவத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வீழ்ச்சியடைந்தே வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பில் ஈடுபடுவது தொடர்பில் அரசு ஆலோசித்து வருகிறது. 

அது தொடர்பாக CSA institute நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அதில் 65% சதவீதமான மக்கள் ‘ஆம்’ என (pour 65%)அதற்கு ஆதரவு கருத்து தெரிவித்தனர். மீதமான 35% சதவீதமானவர்கள் ‘இல்லை’ என (contre 35%) தெரிவித்துள்ளனர். 

இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 18 வயது நிரம்பிய 1,011 பேரிடம் ஒதுக்கீடு முறையை ( méthode des quotas) பயன்படுத்தி தொலைபேசிவழியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்