பாலியல் துன்புறுத்தலின் போது உதவிக்கு அழைக்க - புதிய செயலி!
26 பங்குனி 2024 செவ்வாய் 02:36 | பார்வைகள் : 5265
வீதிகளில், பொது இடங்களில், பொது போக்குவரத்துக்களில் என பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் இடம்பெறும் போது உதவுவதற்காக செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொது இடங்களில் பயணிக்கும் போது நீங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானால், குறித்த செயலியை திறந்து அதன் நடுவில் இருக்கும் பொத்தான் ஒன்றை தொட்டால் போதும். நீங்கள் ஆபத்தில் இருப்பதை அருகில் இருக்கும் 50 பேருக்கு உடனடியாக தகவல் அனுப்பும்.
GPS மூலம் இந்த செயலி அருகில் இருந்தும் தொலைபேசிகளை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து பெண்கள் ஆண்கள் என அனைவரும் தரவிறக்கியிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (குறித்த செயலி இருக்கும் தொலைபேசிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை மணி அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
செயலியை உருவாக்கும் பணி தற்போது வேகமாக இடம்பெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்த செயலி சேவைக்கு வரும் எனவும், குறிப்பாக வெளிநாட்டு பெண்கள் பிரான்சில் துன்புறுத்தலுக்கு உள்ளாகாமல் தடுக்க அது உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.