Paristamil Navigation Paristamil advert login

ஐ.பி.எல் போட்டி- லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்

ஐ.பி.எல் போட்டி- லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்

24 பங்குனி 2024 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 3794


ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லக்னோ அணிக்கு வெற்றி இலக்காக 194 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்தார்.

மேலும் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணி சார்பில் கே.எல் ராகுல் 44 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இறுதியில் லக்னோ சுப்பர் ஜயாண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் இடம் தோல்வியடைந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்