Paristamil Navigation Paristamil advert login

கெஜ்ரிவால் கைதை கண்டித்து டில்லியில் பேரணி: இண்டியா கூட்டணி முடிவு

கெஜ்ரிவால் கைதை கண்டித்து டில்லியில் பேரணி: இண்டியா கூட்டணி முடிவு

24 பங்குனி 2024 ஞாயிறு 15:01 | பார்வைகள் : 2151


டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அடுத்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) டில்லியில் பேரணி நடத்த ‛ இண்டியா ' கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் டில்லியில் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது, டில்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், அரசியல்வாதிகளை பயமுறுத்தவும், எதிர்க்கட்சிகளை ஒழிக்கவும் விசாரணை அமைப்புகளை பிரதமர் பயன்படுத்துகிறார். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல் பீஹாரில் தேஜஸ்வி வரை அனைவர் மீதும் பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விதம் மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவால் குடும்பம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்தியாவின் பழமையான கட்சியால் தேர்தல் பிரசாரத்தில் கூட ஈடுபட முடியவில்லை. பேரணிக்கு அடுத்த வாரம் அதிகாரிகளிடம் அனுமதி வாங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

டில்லி மாநில காங்., தலைவர் அர்விந்தர் சிங் லவ்வி கூறுகையில், இது தான் ஜனநாயகமா மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரை கைது செய்கிறீர்கள். பழமையான கட்சி வங்கிக்கணக்கை முடக்குகிறீர்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல் போர் தொடுத்துள்ளார். காங்கிரஸ் எப்போதும் பின்வாங்காது. பேரணிக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்