ஒடிசாவில் பா.ஜ., பிஜூ கட்சியிடையே சட்டசபைக்குதான் போட்டி மத்தியில் தார்மீக உறவு
24 பங்குனி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 2055
ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் பார்லி., தேர்தல்களில் பா.ஜ., வும் பிஜூ ஜனாத தளமும் தனித்தனியாக களம் காண உள்ளன.
ஒடிசா மாநிலத்தில் 147 சட்டசபை தொகுதகள் மற்றும் 21 பார்லி தொகுதிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத் தேர்தல்களில் இரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் இரு கட்சிகளும் தனித்தே தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ஒடிசா பா.ஜ., தலைவர் ஒருவர் கூறுகையில்: நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி கடந்த 10 ஆண்டுகளாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களில் மத்தியில் மோடி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதே நேரத்தில் பல நலதிட்டங்கள் ஒடிசா மாநிலத்தில் மோடி அரசின் பல நலத்திட்டங்கள் ஒடிசாவில் செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக மாநில மக்கள் அவற்றின் பலன்களைப் பெறவில்லை. ஒடிசா அடையாளம், ஒடிசாவின் பெருமை மற்றும் நலன் தொடர்பான பல பிரச்சினைகளில் எங்களுக்கு கவலைகள் உள்ளன.
ஒடிசாவின் 4.5 கோடி மக்களின் நம்பிக்கைகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும், வளர்ந்த ஒடிசாவை உருவாக்கவும், பாஜக 21 மக்களவை மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டிலும் தனித்து போட்டியிடுவோம் என எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதே போல் பிஜேடி பொதுச் செயலாளர் பிரணாப் பிரகாஷ் தாஸ், எக்ஸ் வலைதள பதிவில் ஒடிசா மக்களை எப்போதும் முன்னணியில் வைத்திருக்கும் முடிவுகளை கட்சி தொடர்ந்து எடுக்கும் .'ஜகந்நாதரின் ஆசீர்வாதத்துடனும், ஒடிசா மக்களின் நம்பிக்கையுடனும், பிஜேடி மாநிலத்திற்கு சேவை செய்து வருகிறது மற்றும் எல்லா துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றியமைத்து வருகிறது,' என்று பதிவிட்டு உள்ளார்.