◉ மொஸ்கோவில் தாக்குதல்! - பிரான்சில்
25 பங்குனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 5988
மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் Vigipirate திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
"Vigipirate" என்பது பிரான்சில் உருவாக்கப்பட்ட ஒரு அவசரகால எச்சரிக்கை திட்டமாகும். பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும் என சந்தேகிக்கப்பட்டால், வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு, கருஞ்சிவப்பு ஆகிய ஐந்து வர்ணங்களில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதற்கு ஏற்றால் போல் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
2014 ஆம் ஆண்டுவரை நடைமுறையில் இருந்த இந்த திட்டம், பின்னர் நீக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கு நிகரான ஒரு எச்சரிக்கை சமிக்ஞை மீண்டும் கொண்டுவரப்பட உள்ளது.
மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, நேற்று மார்ச் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 'பாதுகாப்புச் சபை' ஒன்று கூடியது. அதில் ஜனாதிபதி மக்ரோனும் கலந்துகொண்டிருந்தார். அந்த சபையின் போது மேற்படி திட்டத்தை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாதுகாப்புச் சபையில் குறிப்பிட்டார்.