◉ இஸ்ரேலிய பிரதமரை எச்சரித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!
25 பங்குனி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 4878
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யகுவினை தொலைபேசியில் அழைத்து உரையாடியிருந்தார். ‘பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில்’ தனது எச்சரிக்கையை தெரிவித்தார்.
இஸ்ரேல் கடந்த சில நாட்களாக காஸா பகுதிக்குட்பட்ட ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். சிலர் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், நேற்று மார்ச் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமரை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்றுவது போர்க்குற்றமாகும்!” என எச்சரித்தார்.
ரஃபா நகர் மீதான தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை பிற்பற்றுமாறும் எச்சரித்தார்.
”இஸ்ரேலுக்கு இருப்பது போன்ற அதே திட்டம் தான் எங்களுக்கும் இருக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பது. ஆனால் பொதுமக்களை அல்ல!” என ஜனாதிபதி தனது X சமூகவலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.